மருத்துவர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் திண்டாட்டம்!!

வடக்கு மாகாண உட்பட நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருநாள் சேவைப் புறக்கணிப்பை இன்று நடத்தியது. மருத்துவர்களின் சேவைப் புறக்கணிப்பால் நோயாளர்கள் இடர்களைச் சந்தித்தனர்.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மேற்கொள்ளப்பட்ட சேவைப் பரிமாற்ற உடன்படிக்கை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தே இந்தச் சேவைப் புறக்கணிப்பு நடைபெற்றது.

 

 

வடக்கிலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர். அவசர மருத்து சேவைகள் மட்டும் வழங்கப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலையின் வெளி நோயார் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிநோயாளர் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் நோயாளர்களை பார்வையிட்ட போதிலும் ஏனைய சிகிச்சைகள் முற்றாகச் செயலிழந்திருந்தன. உயிர்காப்பு சேவைகள் முன்னெடுக்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் இயங்கின. மலையகத்திலும் மருத்துவர்கள் சேவைகளைப் புறக்கணித்தனர்.

You might also like