மாநகரம்’ இயக்குநரின் படத்தில் கார்த்தி?

‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி தற்போது அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் கார்த்தி என்று கூறப்படுகிறது.

You might also like