மானிப்­பாய் பரிஸ் அணி வின்ஸை தோற்­க­டித்­தது!!

கொக்­கு­வில் சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் யாழ்ப்­பாண மாவட்ட கிரிக்­கெட் சங்­கத்­தில் பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் மானிப்­பாய் பரிஸ் அணி 98 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் மானிப்­பாய் பரிஸ் அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் வின்ஸ் அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய மானிப்­பாய் பரிஸ் அணி 26.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 9 இலக்­கு­களை இழந்து 235 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக நிதர்­சன் 71, வினோத் 45, ஹரி­ஹ­ரன் 42 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் திலக்­சன் 5 இலக்­கு­க­ளை­யும், உத­யன், வினோத் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர். பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ் வின்ஸ் அணி 21.3 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 137 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக விதுர்­சன் 32, ஜெபர்­சன் 31, ஒலி­சி­யஸ் 22 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஹரி­ஹ­ரன், நிதர்­சன் ஆகி­யோர் 3 இலக்­கு­க­ளை­யும், கிசோத் கு­மார், வினோத் ஆகி­யோர் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close