மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியமர்ந்துள்ள சிங்கள இன மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கிளாய் முகத்துவாரம் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையால் அடிக்கல் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் அந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like