side Add

மியூசியமாகிறது- தாய்லாந்துக் குகை!!

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான காணொளி காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தாய்லாந்து தலைமை அமைச்சர் பிரயட் சான்-ஓ-சா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

12 மாணவர்கள் மீட்கப்பட்ட குகை இனி விரைவில் மியூசியமாக மாற்றப்படும். பயணிகள் அனைவருக்கும் எப்படி மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கண்காணிக்கும் விதமாக இனி பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like
X