மிளகு வடை

தேவையானவை

உளுத்தம் பருப்பு – 1 கப்

மிளகு – 1 தேக்கரண்டி

அரிசி மா – 1 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மா மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவுக்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும்.

வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும்.

You might also like