மீண்டும் சீதையாக நயன்தாரா!!

பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.

நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர், ஸ்ரீராம ராஜ்யமே தனது கடைசி படம் என அறிவித்தார். ஆனால் அவர் நினைத்ததை போல் பிரபு தேவாவை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. இருவரும் மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் 3டியில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ளது ராமாயணம் காவியம். இதுவரை ராமாயணம் குறித்த பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது ராமாயணம்.

இந்தப் படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் ராமாயணம் படத்தை தயாரிக்கிறார்.

படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளனர். ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like