மீண்டும் டிடி!!

தொகுப்பாளராக மட்டுமின்றி, படங்களிலும் நடித்து வருகிறார் டிடி. தனுஷின் ‘பவர்பாண்டி’, ஜீ.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் டிடி.யின் நடிப்பில் சமீபத்தில் வெளியானவை.

கடந்த சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த டிடி, தற்போதுமறுபடியும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். ஏற்கெனவே வெளியான ‘எங்கிட்ட
மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை, டிடி தொகுத்து வழங்குகிறார். முதல் சீஸனையும் அவர் தான் தொகுத்துவழங்கினார். இதன் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘பேட்ட’ படத்தில் ரஜினி பேசும் வசனங்களை, நிகழ்ச்சிக்கு ஏற்றது போல் மாற்றிப் பேசியுள்ளார் டிடி.

You might also like