முன்­னிலை பெற்­றது இங்­கி­லாந்து அணி

இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் ஆட்­டத்­தின் முத­லா­வது இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­றது இங்­கி­லாந்து அணி.

கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் இந்த ஆட்­டம் ஆரம்­ப­மா­னது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது. அந்த அணி 7 இலக்­கு­களை இழந்து 312 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் முதல்­நாள் ஆட்­டம் முடி­வுக்கு வந்­தது.

மொயின் அலி 23 ஓட்­டங்­க­ளு­ட­னும் ரசிட் 13 ஓட்­டங்­க­ளு­ட­னும் இரண்­டாம் நாளுக்­கா­கக் கள­மி­றங்­கி­னார்­கள். 33 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் மொயின் அலி. புரோட் ஓட்­ட­மெ­தை­யும் பெற­வில்லை. லீச் 2 ஓட்­டங்­க­ளு­டன் வீழ்ந்­தார்.

336 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது இங்­கி­லாந்து.
பந்­து­வீச்­சில் சன்­ட­கன் 5 இலக்­கு­க­ளை­யும், பெரேரா 3 இலக்­கு­ க­ளை­யும், புஸ்­ப­கு­மார 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இலங்கை அணிக்கு முன்­வ­ரிசை பேரெ­ழுச்சி கொடுத்­தது. குண­தி­லக 18 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றி­னா­லும், கரு­ணா­ரத்ன 83 ஓட்­டங்­க­ளை­யும், தனஞ்­சய டி சில்வா 73 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

இலங்­கை­யின் மத்­திய வரி­சை­யும் பின்­வ­ரி­சை­யும் ரசிட்­டின் சுழ­லில் அப்­ப­டியே சர­ண­டைந்­தது. 240 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது இலங்கை.

பந்­து­வீச்­சில் ரசிட் 5 இலக்­கு­க­ளை­யும், ஸ்ரோக்ஸ் 3 இலக்­கு­க­ளை­யும், லீச் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்.

96 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு­டன் கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணி இலக்­குச் சரி­வில்­லா­மல் 3 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த போது நேற்­றைய நாள் முடி­வுக்கு வந்­தது.

You might also like