முல்லைத்தீவில் 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு- காரணம் கண்டறியப்படவில்லை!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கான காரணம் வெளியாகவில்லை. உடற்கூற்று பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு 20 நிமிடங்களின் பின்னரே சிகிச்சை வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like