side Add

முல்லைத்தீவு மாணவர்களுக்கு- கற்றல் உபகரணங்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சுதந்திரபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நிகழ்வு நடைபெற்றது.

68 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அருணஆரியசிங்க ,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன்,மாவட்ட இடர் முகாமைத்து உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், டயலக் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வட பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பாதுகாப்பு அமைச்சு, இலங்கைப் படையினர், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், டயலக் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து உங்கள் மறுமலர்ச்சிக்கு நாம் என்ற தொனிப்பொருளில் உதவிப் பொருள்களை வழங்கி வைத்தனர்.

You might also like