மூடப்பட்ட பாடசாலையை -மீளத் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொத்மலை பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில், பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்வேவ ஆரம்பப் பாடசாலையில் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 நாட்களாக பாடசாலை மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதமமைடந்துள்ளது.

மல்வேவ விகாரையில் தற்காலிகமாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அங்கு பல அடிப்படை பிரச்சினைகள் காணப்படுவதாக , பெற்றோர்கள் தெரிவித்தனர்.

You might also like