யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் கௌரவிப்பு!!

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
அளவெட்டி வடக்கைச் சேர்ந்த மனோகரன் கோகிலன், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சண்முகநாதன் ரஞ்சித்குமார் மாகாண மட்டத்தில் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ப பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்கள், சிறந்த விவசாயச் செயன்முறைத் தொழில் நுட்பங்களைப் பழ உற்பத்தியில் நடைமுறைப்படுத்துபவர்கள் ஆகிய தலைப்புக்களில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற 12 வெற்றியாளர்களும், பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற 136 வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராணி நிக்கலஸ்பிள்ளை, விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி தி. கருணைநாதன், விதைகள் அத்தாட்ச்சிப்படுத்தல் சேவை நிலைய பொறுப்பதிகாரி அ.ரமணீதரன், கமநல அபிவிருத்தித்திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. கோபிநாத், விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், வெற்றிபெற்ற விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You might also like