ரணிலுக்கான கூட்டமைப்பின் ஆதரவு எத்தகையது?

இலங்கை அர­சி­ய­லில் உல­கப் பிர­சித்தி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரி­யாக உரு­வெ­டுத்­த­வர் ஜே.ஆர் ஜெய­வர்த்­தன. இவர் ஒரு முழு­நேர அர­சி­யல்­வாதி. தனது மூளைப்­ப­லத்­தால், உள்நாட்டு அர­சி­யல், பிராந்­திய அர­சி­யல், பன்­னாட்டு அர­சி­யல் என எல்லா மட்­டங்­க­ளி­லும் தனது ஆளு­மை­யைச் செலுத்­தி­ய­வர்.
உயர் கல்வி, உயர் சாதி மதிப்பு, பண பலம் என எல்­லாம் கிடைக்­கப் பெற்ற நபர்.

அவ­ரி­ட­முள்ள மிக முக்­கி­ய­மான விட­யம் அல்­லது மற்­ற­வர்­கள் விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம் அவ­ரி­டம் நூறு ரூபா கூட ஊழல் இல்­லா­ததே. இந்த நப­ரு­டன் ஒப்­பி­டக்­கூ­டிய ஒரு தமி­ழரோ, முஸ்­லிமோ இல்லை. இந்­த ஊழல் விட­யத்­தில் மிக­வும் கண்ணி­ய­மான ஒரு­வ­ராக இன்­று­வரை அர­சி­ய­லில் நிற்­ப­வர் அவ­ரது மரு­ம­க­னான ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்­றால் நம்­பு­வது கடி­ன­மா­ன­தாக இருக்­க­லாம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனக்­காக நூறு ரூபா­வைக்­கூட எடுப்­ப­தில்லை. இந்த அடிப்­ப­டை­யில் கூறக்­கூ­டிய இன்­னோர் நபர் அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்த சந்­தி­ரிகா. அவ்­வ­றெ­னில் ரணிலை ‘ஹோறா’ (கள்­ளன்) என்று எதிர்க் கட்­சி­கள் கத்­து­வ­தன் அர்த்­தம் என்ன?

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு நிதி வழங்­கு கின்ற முக்கிய நபராக இருந்­த­வர் தயா­க­மகே. அவ­ருக்­குச் சொந்­த­மான எல்­வத்த சீனித் தொழிற்­சாலை மற்­றும் சாராய உற்­பத்தி நிலை­யங்­கள் மகிந்த தரப்­பி­ன­ரால் 2015ஆம் ஆண்­டுக்கு முன்­னர் முடக்­கப்­பட்­டன. கட்­சிக்­குத் தேவை­யான பணத்­தைப் பெறு­வ­தற்­கா­கவே அர்­ஜூன் மகேந்­தி­ரன் மத்­திய வங்­கி­யின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டு (ஜன­நா­யக விரோ­தச் செயல்) பிணை முறி மோச­டி­யில் அவ­ரது மரு­ம­க­னான அர்­ஜூன் அலோ­சி­யஸ் முன்­னிறுத்­தப் பட்­டது, கிழக்கு மாகா­ணத்­தில் முத­லீடு செய்­யப்­பட்ட வடி­சாலை என்­பன எல்­லாமே ரணி­லுக்கு உத­வி­யா­கத் தமி­ழரே செயற்­ப­டு­கின்­ற­னர் என்ற மறை­மு­க­மான பரப்புரையை மகிந்த தரப்பு முன்­வைப்­ப­தற்­குக் கார­ண­மாக அமைந்­தன.

இதில் 10ரூபா கூட ரணில் தனக்­காக எடுக்­க­வில்லை என்­பது உண்­மை­தான். ஆனால், மற்­ற­வர்­க­ளுக்கு இலஞ்­சம் வழங்­க­வும் ஏனை­ய­வர்­கள் தன்­னில் தங்கி நிற்­க­வும் இந்­தப் பணத்தை ரணில் கையாண்­டார் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது. இத­னால், பல அர­சி­யல் வாதி­கள் விரும்­பியோ, விரும்­பா­ மலோ ரணிலை ஆத­ரிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின்
தமி­ழர் மீதான அரா­ஜ­கங்­கள்
1993ஆம் ஆண்­டில் ரண­சிங்க பிரே­ம­தா­ச­வின் சாவின் பின்­னர் ஏறத்­தாழ கால் நூற்­றாண்டு அர­சி­யலை ஐக்­கிய தேசி­யக் கட்சி இழந்­தி­ருந்­தது. அதற்கு முதன்­மைக் கார­ணம் காமினி திசா­நா­யக்க, லலில் அத்­து­லத் முதலி, ஜி.எம்.பிரே­மச்­சந்­திர போன்ற இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள் கொல்­லப்­பட்­ட­மைதான். ஐக்­கி­ய­தே­சி­யக் கட்­சி­யின் ஆட்­சிக் காலத்­தி­லேயே 1977ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரம், 1981ஆம் ஆண்டு யாழ்ப்­பாண நூலக எரிப்பு, 1983ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரம், 1987ஆம் ஆண்டு இந்­திய – –இலங்கை ஒப்­பந்­தத்­தில் வடக்­கை­யும் கிழக்­கை­யும் பிரிப்­ப­தற்கு வெலி­ஓயா என்ற நிலப்­ப­ரப்பை வட­மத்­திய மாகா­ணத்­து­டன் இணைத்­தமை எனத் தமி­ழ­ருக்கு எதி­ரான பல திட்­ட­மிட்ட பாதிப்­புக்கள் ஏற்படுத்தப்பட்டது.

மிக இறுக்­க­மான கட்­டுப்­பாட்­டு­டன் இருந்த விடு­த­லைப் புலி­கள் அமைப்பை 2002 ஆம் ஆண்­டில் பேச்சு என்ற பெய­ரில் தலை­ம­றை­வு வாழ்வில் இருந்த வெளி­யில் கொண்டு வந்து, பன்­னாட்டு அரங்­கில் பேச்­சு நடத்தி 2004ஆம் ஆண்­டில் கரு­ணாவை அந்த அமைப்­பி­லி­ருந்து பிரித்த பெரு­மை­யும் அந்தக் கட்சிக்கே உண்டு.

கண்டுகொள்­ளப்­ப­டாத
ஜன­நா­யக மீறல்­கள்
அதன் தலைவர் ரணில் 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பா­லவை அது­வும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­ல­ரையே பிரித்­தெ­டுத்து வெற்றி பெறச் செய்­த­வர். இது ஓர் அடிப்­படை ஜன­நா­யக மீறல். ரணில், மைத்­திரி ஆகிய இரு­வ­ருக்­கும் இதில் பங்­குண்டு. இந்­தச் சூழ­லில் வெறும் 42ஆச­னங்­களை வைத்துக் கொண்டு ரணில் தன்­னைத் தலைமை அமைச்­ச­ராக அறி­விக்கக் கேட்டதும் ஒரு ஜன­நா­யக விரோத நட­வ­டிக்கை. நாடா­ளு­மன்ற விதி முறை­க­ளை­யும் சட்ட திட்­டங்­க­ளை­யும், நன்கு அறிந்த ரணில் அதை மீறி­யதை மூத்த சட்­டத்­த­ர­ணி­யான சம்­பந்­தர்­கூட அப்­போது எதிர்க்­க­வில்லை. மாறாக எதிர்க்க வேண்­டி­ய­வ­ருக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யும் வழங்­கித் தன்னை எதிர்க்­கா­மல் இருக்­கச் செய்­த­வர் ரணில்.

கூட்­ட­மைப்­பின் ரணில்
மீதான நம்­பிக்கை எப்­ப­டிச் சாத்­தி­யம்?
2015ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் தமிழ் மக்­கள் வாக்­க­ளித்­த­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமி­ழ­ருக்­குச் சார்­பா­கப் பல விட­யங்­களை நிறை­வேற்­று­வார்­கள் என நம்­பி­னர். இந்த நிலை­யில் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளின் மூலம் பெற்ற 16 பிர­தி­நி­தி­கள் என எல்­லா­வற்­றை­யும் ரணில் என்­கிற தனி மனி­த­ரி­டம் எதை நம்பி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் அடகு வைத்­தார்­கள்?

இதுவே மக்­க­ளின் கேள்­வி­யாக இருக்­கி­றது. நல்­லாட்சி என்ற பெய­ரில் பல விட­யங்­க­ளை­யும் செய்து தரு­வார்­கள் என நம்பி, மூன்­றரை வரு­ட­ கா­லங்­கள் கடந்­துள்ள நிலை­யில், கூட்­ட­மைப்­பின் செயற்­பாடு கார­ண­மாக 2018ஆம் ஆண்­டில் நடந்த உள்­ளூ­ரட்­சித் தேர்­த­லில் வடக்­கில் பூந­க­ரிப் பிர­தேச சபை­யை­யும் கிழக்­கில் வெரு­கல் பிர­தேச சபை­யை­யும் மட்­டுமே வெல்ல முடிந்­தது. இந்­தச் சரிவு நிலைக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் ரணி­லுக்­கும் இடை­யி­லான இர­க­சிய உற­வு­களே கார­ண­மாக அமைந்­தன.

கூடி முடி­வெ­டுப்­ப­தில்
கூட்­ட­மைப்­பி­னர் தயக்­கம்
சம்­பந்­தர், சுமந்­தி­ரன், மாவை ஆகிய மூவ­ரும் இணைந்தே பல தீர்­ம­னங்­க­ளை­யும் எடுக்­கின்ற கூட்­டங்­க­ளில் கலந்­து­கொண்டு வரு­வ­தால், ஏனைய 13 உறுப்­பி­னர்­க­ளுக்­கும் என்ன நடக்­கின்­றன என்­பதை விளங்­கிக் கொள்ள முடி­யா­தி­ருந்­தது. ரணில் – மைத்­திரி முரண்­பாட்­டின்போது ரணி­லைக் காப்­பாற்­று­வ­தில் இந்த மூவ­ரும் எடுத்த முயற்­சிக்கு ஏனை­ய­வர்­கள் ஒத்­து­ழைப்­ப­தில் சிர­மங்­கள் இருந்­த­தா­கவே தெரி­கி­றது. இந்த முரண்­பாட்­டின் ஒரு வடி­வ­மா­கக்­கூட வியா­ழேந்­தி­ரன் கிழக்கு மாகாண மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக அர­சு­டன் இணைந்­த­தா­க­கக் கூறி­வ­ரு­வ­தும் பார்க்­கப்­ப­டு­கின்­றது. வட­மா­காண முன்­னாள் முதல்­வர் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து பிரித்து தமிழ் மக்­கள் கூட்­டணி என்­றொரு புதிய கட்­சி­யைத் தொடங்­கு­வ­தற்­கும் இது வித்­திட்­டது என்ற வாதப்­பி­ர­தி­வா­தங்க­ளும் இல்­லா­மல் இல்லை. இவை ஆரோக்­கி­ய­மான அர­சி­யல் கட்சி ஒன்­றுக்­கு­ரிய அடிப்­ப­டைப் பண்­பு­க­ளா­கத் தெரி­ய­வில்லை.

தற்­போ­தைய நெருக்­க­டி­யில்
கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு
எமது மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை ­களை எந்­தச் சிங்­க­ளத் தலை­வ­ரும் தீர்த்து வைக்­காத நிலை­யில், இந்த நெருக்­க­டிச் சூழ­லில் நாம் எந்­த­வொரு கட்­சிக்­கும் சார்­பா­க­வும் வாக்­க­ளிப்­பில் ஈடு­பட்­டால் எம்­மைத் தெரி­வு­செய்த மக்­கள் எம்­மீது அதி­ருப்­தி­யும் ஆத்­தி­ர­மும் அடை­வர் எனவே நாம் நடு நிலை வகிக்­கி­றோம் உங்­கள் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­த­தன் பின்­னர் எமது மக்­க­ளின் விட­யத்­தில் தீர்வு காண்­ப­தற்கு உத­வுங்­கள் என்று கூட்­ட­மைப்­பி­னர் கூறி­யி­ருக்க முடி­யும். தமிழ்த் தலை­வர்­கள் தாம் ஒரு சிறு­பான்மை இனத்­தின் பிர­தி­நி­தி­கள் என்றோ முப்­பது வரு­டப் போரில் தமது மக்­கள் சின்­னா­பின்­னப்­பட்­டிருக் கி­றார்­கள் என்றோ நினைப்­ப­தில்லை. தமது மக்­க­ளின் தேவைக்­காக உழைக்­கா­மல் வேறு யார் யாருக்­காவோ செஞ்­சோற்­றுக் கடன் தீர்ப்­ப­து­போ­லவே அவர்­க­ளு­ட­டைய செயற்­பாடு இருப்­ப­தா­கப்படு­கி­றது. மக்­கள் அளித்த தெருத் தேங்­காயை எடுத்து வழிப்­பிள்­ளை­யா­ருக்கு அடித்து விட்­டுச் செல்­வது இவர்­க­ளின்­வ­ழக்­க­மா­கி­விட்­டது.

சுமந்­தி­ரன் மற்­றும்
சிறீ­த­ர­னின் நிலைப்­பா­டு­கள்
மகிந்­தவை உடன் நீக்­கா­விட்­டால் அரச தலை­வ­ருக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் எனச் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டது சாதா­ரண சிங்­கள மக்­க­ளைக்­கூ­டத் தமி­ழர் மீது கோபப்­பட வைத்­தி­ருக்­கி­றது. சுமந்­தி­ரன் இப்­ப­டிக் கூறி­யதை விட மோச­மாக ஒரு சிங்­க­ள­வர் பேசி­யி­ருந்­தால் அதை அவர்­கள் கண்­டு­கொள்­ளப் போவ­தில்லை. அண்­மை­யில் கூட்­ட­மைப்­பி­னர் தமக்­குள் நடத்­திய கலந்­து­ரை­யா­டல் ஒன்­றின்­போது ஐக்­கி­ய­தே­சி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் காசிம், றிசாத் பதி­யு­தீன், ஹெரான் விக்­கி­ர­ம­ரட்ண, பேரா­சி­ரி­யர் மாற­சிங்க, அஜித் பெரேர, இசான் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் அங்கு சென்று ‘’ரணி­லுக்கு ஆத­ரவு என சத்­தி­யக் கட­தாசி தர வேண்­டிய அவ­சி­ய­மில்லை எமக்கு ஆத­ர­வுள்ள 122பேரும் 1 – 122வரை­யான இலக்­கங்­க­ளைக் கையில் ஏந்­தி­ய­வாறு காலி முகத்­தி­ட­லில் அல்­லது அரச தலை­வர் மாளி­கைக்கு முன்­னால் நின்­றால் ரணி­லுக்கு இருக்­கும் ஆத­ரவை பன்­னா­ட­டுச் சமூ­கத்­துக்கு வெளிப்­ப­டுத்த முடி­யும் எனவே தவ­றாது இதில் கலந்து கொள்ள வேண்­டும்’’ என்று கேட்­டுள்­ள­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் இவ்­வாறு கருத்­து­ரைத்­தார், ‘‘இன்று உங்­க­ளுக்­குள்ள பிரச்­சினை ஆட்­சி­ய­மைப்­பது யார்? ஜன­நா­ய­கம் தப்­பிப் பிழைக்­குமா? என்ற சர்ச்­சையே. ஆனால், எற்­க­ளன் பிரச்­சினை வேறு. போர் முடி­வ­டைந்து 9ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. எமது அர­சி­யல் கைதி­கள் தொடர்ந்­தும் சிறை­யில் வாடு­கின்­ற­னர். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட எமது மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ட­ வில்லை. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னைக்கு இன்­னும் தீர்­வில்லை. பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டம் இன்­னம் நீக்­கப்­ப­ட­வில்லை. பொறுப்­புக் கூறப்­ப­ட­ வில்லை. உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. எமது மக்­க­ளின் சார்­பா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஆகிய நாங்­கள் குறைந்த பட்­சம் நாடா­ளு­மன்­றில் சபா பீடத்­துக்கு முன்­னால்­கூட ஒன்­று­கூ­டிப் போரா­ட­வில்லை. இதை வெளி­யு­ல­குக்­குக் காட்­டு­வ­தற்காக நாம் ஒன்­று­கூ­டிக் கொழும்­பில் போராட்­டம் நடத்­த­வில்லை. தற்­போது ரணி­லைக் காப்­பாற்­று­வ­தற்­காக ஒன்று திரண்­டால் எமது மக்­கள் எம் மீது உமிழ் நீரை உமிழ மாட்­டார்­களா?’’

சிறீ­த­ர­னின் இந்த வார்த்­தை­கள் கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளா­கக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு என்ன செய்­தி­ருந்­தது என்­பதை வெளிப்­ப­டை­யாக எடுத்­துக் காட்­டு­வ­தா­கவே அமைந்­தது. ஆனால், 23.11.2018இல் நாடா­ளு­மன்று கூடி­ய­போது தெரி­வுக்­குழு அங்­கத்­த­வர் விட­யம் திடீ­ரென வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது தினேஸ் குண­வர்த்­தன முன்­வைத்த ஆளும் கட்­சி­யி­ன­ருக்கே அதிக அங்­கத்­து­வம் தரப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை 121அங்­கத்­த­வர்­கள் ரணி­லுக்கு ஆத­ர­ச­ளித்த கார­ணத்­தால்,நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு இருக்­கின்ற 121பேரின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­தி­யது. இந்த 121பேரில் மேலே சீறி­யி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ர­னும் அடங்­கி­யுள்­ளார்.

You might also like