ராஜன் கதிர்­கா­மர் சுற்­றுக் கிண்­ணம் – 20 ஆவது தட­வை­யாக பற்­றிக்­ஸி­டம்!!

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான ராஜன் கதிர்­கா­மர் சுற்­றுக் கிண்­ணத் துக்­கான நேற்­றைய ஆட்­டத்­தில் 187 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று 20 ஆவது தட­வை­யாக அந்­தக் கிண்­ணத்தை வசப்­ப­டுத்­தி­யது சென். பற்­றிக்ஸ்.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி நிர்­ண­யிக்­கப் பட்ட 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 299 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஆரம்­பத் துடுப்­பாட்ட வீர­ரான டிலக்­சன் 96 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். அவர் சதத்தை நிறை­வு­செய்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதி­லும் லோன் ஒன் திசை­யில் சிக்­சர் விளாச முற்­பட்டு ஆட்­ட­மி­ழந்­தார். அவரை விட மொனிக் நிசாந்­தன் 51 ஓட்­டங்­க­ளை­யும், கஸ்ரோ 45 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் டிகாஸ் 4 இலக்­கு­க­ளை­யும், சிந்­து­யன் 3 இலக்­கு­க­ளை­யும், கேச­ வன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய யாழ்ப்­பா­ணக் கல்­லூரி அணி 112 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 187 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது. அதி­க­பட்­ச­மாக நிசாந் 15 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.
பந்­து­வீச்­சில் பியற்றிஸ் 3 இலக்­கு­க­ளை­யும், கஸ்ரோ, டினி­சி­யஸ் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும், மொனிக் நிது­சன், டிலக்­சன் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

ஆட்­ட­நா­ய­க­னா­க­வும், சிறந்த துடுப்­பாட்ட வீர­ரா­க­வும் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி­யின் டிலக்­சன், சிறந்த சக­ல­துறை வீர­ராக அதே அணி­யின் மொனிக் துசாந், சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரி­யின் பிர­காஸ், சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் ஐவன் றொசாந், சிறந்த இணைப்­பாட்ட வீரர்­க­ளாக டிலக்­சன் மற்­றும் கஸ்ரோ ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

You might also like