ரிசாத்துக்கு எதிராக- இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத் கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்டவர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

ரிசாத்துக்குச் சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனம் ஊடாக சம்பளம் வழங்கப்படுகின்றது.

அவருக்குச் சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது.

இவற்றுக்கான ஆதரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. அந்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

You might also like