வடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!!

அயர்லாந்தில் கலவரம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

” வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள சிரிகனில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெகீ துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லைரா அட்லாண்டிக் பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2016 -இல் ஊடகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடப்பெற்றிருந்தது.

You might also like