வடக்கு மாகாணம் விவசாயத்தில் பெரும் பின்னடைவு!!

வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் –

காணப்படுகின்றன என்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று ஆக கடைசி நிலையில் உள்ளது. வடக்கின் விவசாய உற்பத்திகள் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் வடக்கில் 40 வீதமானவர்கள் விவசாயிகளாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மாவட்டச் செயலர் சுந்திரம் அருமைநாயகம், மற்றும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆயகுலன், கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி, பிரதேச செயலாளர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like