side Add

வட்டாரத்துக்கு ஒரு வீடு -திட்ட வரைவு ஆளுநருக்கு!!

நல்லூர் பிரதேச சபையின் ஊடாக வட்டார ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்ட முன்மொழிவு வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் 12 வட்டரங்களுக்கு ஒவ்வொரு வீடு என்ற அடிப்படையில் வீட்டுத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கடந்த வருட சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைவாக உறுப்பினர்களிடம் இருந்து வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன..அவ்வாறு பெறப்பட்ட பெயர் விபரங்கள் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளின் முழுமையான விபரங்கள் ஆராயப்பட்டன.

வழமையான வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் வழங்கப்பட்டு பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றன.

அவ்வாறு இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள், எமது திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் வீட்டுத்திட்டம் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like