வரலாற்றுச் சாதனை படைத்த 127 குருதிக் கொடையாளர்கள்!!

சாவகச்சேரி முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஆ. துரைராஜசிங்கத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இளவாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட குருதித் தான நிகழ்வில் 127 பேர் குருதி வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

தெல்லிப்பழை குருதி வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி ம.பிரதீபன் தலைமையிலான குழுவினர் குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

You might also like