வவுணதீவு படுகொலை- திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்!!

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவரைச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒருபோர் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை இடம்பெற்றது.

You might also like