வாழைப்பழக் கேக்!!

தேவையானவை

பெரிய வாழைப்பழம் – 3
மைதா – 3 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு இல்லாத் வெண்ணெய் – 3/4 கப்
சீனி – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
முட்டை – 3
பட்டர் மில்க் – 1 1/2 தேக்கரண்டி
நட்ஸ் வகைகள் – அரை கப்

செய்முறை:

வாழைப்பழத்தை நறுக்கி மசித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பாத்திரத்தில் மைதாவைக் கொட்டி அதில் உப்பு , பேக்கிங் சோடா, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய்யை நன்கு மசித்துக் கொள்ளவும். அதோடு சர்க்கரை மற்றும் சீனி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தற்போது கலந்து வைத்துள்ள மைதாவை வெண்ணெயுடன் கொட்டி கலந்து கொள்ளவும். அதில் வெண்ணிலா எசன்ஸ், மூன்று முட்டைகளை உடைத்து நன்றாகக் கலக்கவும். அதில் பட்டர் மில்கையும் சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் பதத்தில் இருந்தால் மைதாவைக் கூடுதலாக தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். கெட்டிப் பதத்தில் கிளறியதும் நட்ஸை உடைத்து அதில் தூவி நன்றாகக் கலக்கவும்.

தற்போது குறைந்த தீயில் குக்கரில் ஒரு கப் உப்பு கொட்டி அதன்மேல் பாத்திர ஸ்டாண்ட் வையுங்கள். 15 நிமிடங்கள் காய்ந்ததும் கேக் கலவையை சிறு பாத்திரத்தில் வெண்ணெய் தடவிக் கொட்டவும். அந்தப் பாத்திரம் சுற்றிலும் குக்கரைத் தொடாதவாறு இருக்க வேண்டும். தற்போது குக்கரை மூடிவிடவும். சிறு தீயிலேயே 45 நிமிடங்கள் வைக்கவும்.

45 நிமிடத்துக்குப் பின் குக்கரைத் திறந்து பாருங்கள் மணமணக்கும் கேக் தயார்.

You might also like