side Add

வாழைப்பூ வடை!!

தேவையானவை

பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1/2 லீற்றர்

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். மாக் கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

You might also like