விஜய்யின் புதிய படத்தில் இன்னொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் நயன்தாராவை அடுத்து இன்னொரு கதாநாயகியாக ‘மேயாத மான்’ பட நடிகை இந்துஜாவையும் இணைந்துள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து தற்போது விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ளனர். இது விஜய்யின் 63 ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

You might also like