விவசாய ஊக்குவிப்பு வாரத்தில்- பல வேலைத் திட்டங்கள்!!

விவசாயத் திணைக்களத்தின் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு மாகாணத்தில் உள்ள விவசாய அலுவலகங்களால் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயிர் சிகிச்சை முகாம் , நவீன விவசாய உபகரணங்கள் தொடர்பான விளக்கங்கள் ,பழமரக்கன்றுகள் மற்றும் விதைகள் விற்பனை,சேதன விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு, பார்த்தீனிய கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகள்,காளான் செய்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா பம்பைமடு விவசாய போதனாசிரியர் பிரிவு , கோவில்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவு ,பாவற்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் தற்போது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like