வீட்­டில் இருந்த 16 பவுண் நகைகள் – பட்டப்பகலில் கொள்ளை!!

கர­ண­வாய் பகு­தி­யில் பட்­டப்­ப­கல் வேளை­யில் வீடொன்­றுக்­குள் புகுந்த திரு­டர்­கள் 16 பவுண் தங்க நகை­களைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் கர­ண­வாய் மத்தி, பாட­சாலை வீதி­யில் உள்ள சதா­னந்­த­மூர்த்தி என்­ப­வ­ரின் வீட்­டில் இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வீட்­டில் உள்ள அனை­வ­ரும் வேலைக்­குச் சென்­றி­ருந்த சம­யம் மூதாட்டி ஒரு­வரே அங்கு தங்­கி­யி­ருந்­தார்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள் வீட்­டுக்­குள் புகுந்து அங்கு சங்­கிலி, காப்­பு­கள், நெக்­லஸ், மோதி­ரம் உள்­ளிட்ட 16 பவுண் தங்க நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­தாக நெல்­லி­ய­டிப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்யப்பட்ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close