வீட்டிலேயே செய்யலாம் ஐஸ் கிறீம்!!

தேவையானவை

பால் – 1 லீற்றர்
முட்டை – 3
சீனி– 3/4 கப்
வெண்ணை – 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
நெய் – சிறிதளவு
முந்திரி – 5

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் 30 நிமிடம் கலந்து விட்டுக்கொண்டே இருக்கவும். பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும்.

அடுத்து 3 முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்து கூடவே சீனினைய் கொட்டி கலந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் பால் கலந்து வெண்ணை சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி வெண்ணெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும். பிறகு 8 நிமிடம் வரை கொதிக்க விட்டு அதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்.

பின்னர் அதனை வடிகட்டி கொள்ளவும்.பிறகு முழுவதும் ஆறியவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 3 முதல் 4 மணி நேரம் வரை பிரீசரில் வைக்கவும்.

4 மணி நேரத்துக்குப் பிறகு அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

மொத்தமாக 4 முறை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஒரு சட்டியில் நெய் ஊற்றி உடைத்துவைத்துள்ள முந்திரியை சேர்த்து வறுக்கவும். பின்னர் சீனி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

முந்திரி முழுவதுமாக ஆறியதும் அதனை நாம் ஏற்கவனவே தயார் செய்த ஐஸ் கிறீமில் கலந்து பரிமாறலாம். இப்போது சுவையான ஐஸ் கிறீம் தயார்.

You might also like