வீதியோரம் நின்ற மாணவர்களை மோதித் தள்ளியது ஹன்ரர்!!

பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நின்ற மாணவர்கள் இருவரை வீதியால் சென்ற ஹன்ரர் வாகனம் மோதித் தள்ளியது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் முதன்மை வீதியில் முள்ளியவளை செங்குந்த வீதி சந்தியில் நடந்துள்ளது.

விபத்து தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like