வெண்ணைத் தோசை

தேவையானவை

புழுங்கலரிசி – 2 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
அரிசி பொரி – 100 கிராம்
மைதா – 1 மேசைக்கரண்டி
வெண்ணை – 100 கிராம் அல்லது தேவைக்கேற்றவாறு
சமையல் சோடா – 2 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தை, உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற விடவும்.

ஊறிய அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதில் உளுத்தம் பருப்பு, வெந்தயம், பொரி, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து, உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.

மறு நாள் காலையில் மாவுடன் சமையல் சோடாவைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, தோசை மா பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது வெண்ணை தடவி, கல் சூடானதும் மாவை கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாகப் பரப்பி விடவும். சிறிது வெண்ணையை எடுத்து தோசையின் மேல் ஆங்காங்கே போடவும். ஒரு புறம் சிவந்து வெந்ததும், திருப்பிப் போட்டு மறு புறமும் சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

You might also like