வைத்தியசாலைக்குள் தலைக்கவசம் தடை!!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வாயிலின் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வைத்திசாலையினுள் செல்லும் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் தலைக்கவசம் கொண்டு செல்லதற்கும் இரானுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

இதனால் சில வர்த்தக நிலையங்களில் தலைக்கவசம் வைப்பதற்கு 10 ரூபா அறவிடப்படுகின்றது.

தலைக்கவச தடை விதிப்பினால் தினசரி வைத்தியசாலைக்கு செல்லும் ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ரூபா.10 கட்டணம் செலுத்தி தலைக்கவசத்தினை வர்த்தக நிலையங்களில் ஒப்படைத்து செல்கின்றனர்.

தினசரி மூன்று நேரமும் நோயாளர்கள் பார்வையிடுபவர்கள் மற்றும் நோயாளர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

எனவே தலைக்கவச தடையை நீக்க வேண்டும் அல்லது நகரசபையினரோ வைத்தியசாலை நிர்வாகத்தினரோ இதற்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like