ஸஹ்ரானின் மனைவி நீதிமன்றில்!!

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாதின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்குமுன்னர், ஸஹ்ரானின் குழு சிலருக்குப் பணம் வழங்கியதாகவும், அவர்கள் யார் என்பதை தன்னால் அடையாளம் கட்ட முடியும் எனவும் ஸஹ்ரானின் மனைவி கூறியதற்கு இணங்க அவர் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like