ஸ்ரீதேவியின் இறப்பில் சந்தேகம் : தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!!

நடிகை ஸ்ரீதேவியின் இறப்புத் தொடர்பான விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த பெப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி டுபாய் சென்றிருந்தார்.

அங்கு நட்சத்திர ஹோட்டலில், குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் ஸ்ரீதேவி மீட்கப்பட்டார். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டுபாய் பொலிஸார், நடிகை ஸ்ரீதேவியின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பொலிவூட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் சிங் என்பவர், நடிகை ஸ்ரீதேவியின் இறப்புக் குறித்து விசாரணை நடத்தக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அங்கு மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இதுபோன்ற இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நடிகை ஸ்ரீதேவியின் இறப்புத் தொடர்பாக விசாரணை கோரும் சுனில் சிங் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close