ஹெரோயினுடன் கைதான நபர்!!

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு ஜாஎல களு பாலத்துக்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 11 கிராமும் 550 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like