side Add

12 பேர் கொண்ட குழு பாகிஸ்தான் பயணம்!!

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.அருமைநாயகம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் ஒரு வாரப் பயணமாக பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் ஏற்பாட்டில் மனிதவலு முகாமைத்துவம் என்னும் சிறப்பு ஆய்வுப் பட்டறையில் பங்கேற்பதற்காக குழுவினர் பாகிஸ்தான் பயணிக்கின்றனர்.

கிளிநொச்சி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் செயலர்களும், ஏனையோர் அமைச்சின் அதிகாரிகளும் இந்தக் குழுவில் அடங்குவர்.

நாளை பயணிக்கும் குழுவினர் எதிர் வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

You might also like