13 மாணவர்களுக்கு திடீர் வயிற்றுவலி!!

கல்முனை சாய்ந்தமருது அஸ்ரப் வித்தியாலயத்தில்  மாணவர்கள் சிலருக்கு  திடீர் வயிற்றுவலி ஏற்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

பாடசாலை உணவகத்தில் உணவருந்திய 13 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்கொண்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like