150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபாகணேசனால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை, மாமடு பழம்பாசி அ.த.க.பாடசாலை, இத்திமடு அ.த.க.பாடசாலை, அலைகல்லுப்போட்ட குளம் அ.த.க.பாடசாலை, ஒதியமலை அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

You might also like