2019 உங்களுக்கு எப்படி?

1 1,354

மேடம்

விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரச விடயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார்.

ரிஷபம்

கலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரப்போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். அதிசாரத்திலும் வக்ரகதியாகவும் செல்லும் குருபகவானால் பொருளாதார நிலை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும். பணம் வருவது போல வந்தாலும் கூடவே செலவுகளை இழுத்துக் கொண்டு வரும்.

மிதுனம்

புத்திசாலித்தனதை இடத்திற்கு ஏற்ப உபயோகிக்கும் மிதுன ராசிக்காரர்களே… இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவரின் அதிசார சஞ்சாரத்தினால் செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குரு பெயர்ச்சியினால் திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

கற்பனை உணர்ச்சி அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு சாதகமாகவே உள்ளது. குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் திருப்பங்களும் வசதி வாய்ப்புகளும் பெருகும். குருபகவான் அதிசார வக்ர சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. தடைபட்ட காரியங்கள் முடிவடையும். வீட்டில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும்.

சிம்மம்

வீரமும் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே… 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப் போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. கிரக பெயர்ச்சிகளும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. குருவின் பயணம் குதூகலத்தை ஏற்படுத்தும் சிலரது மகனுக்கு வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் யோகத்தை தரும். திருமணம் நடைபெறும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும். சனியின் சஞ்சாரம் ஐந்தாம் வீட்டில் இருக்கிறது. அந்த இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார் கேது. இது நன்மை தரும் அமைப்பாகும். லாப ஸ்தானத்தில் வந்து அமரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.

கன்னி

அறிவாற்றலும் அதை செயல்படுத்தும் திறமையும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குருவின் சஞ்சாரம் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அமைந்துள்ளது. 2018 இல் தடைபட்ட காரியங்கள் தடங்கள் எதுவும் இன்றி நடைபெறும். வரவே வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள்.

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரம் பண வருமானத்தை கொடுத்தாலும் சிலருக்கு மருத்துவ செலவுகளைத் தரும். சிக்கனமாக செலவு செய்யவும். யாருக்கு உதவி செய்யும் முன்பு யோசித்து செய்யவும். குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்

வெற்றியை இலக்காகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே…. இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. பாத சனி நடந்தாலும் ஜென்ம குரு சாதகமான பலன்களையே தந்து கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும்.

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட நேர்மையான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. விரைய குரு சுப விரையங்களை ஏற்படுத்துவார். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. புதிதாக அறிமுகம் ஆனவர்களை நம்பி எந்த செயலையும் செய்ய வேண்டாம். திருமண சுப காரியங்கள் நடைபெறும்.

மகரம்

சனியை ஆட்சிநாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே… பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை புரிந்து கொண்டவர்கள் நீங்கள். 2019 ஆம் புத்தாண்டு வருமானத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரத்தினால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் கட்டுப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்து விட்டது.

கும்பம்

எதையும் குணமாக சொல்லும் கும்ப ராசிக்காரர்களே. உங்களுக்கு 2019 ஆண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பத்தாம் வீட்டில் இருக்கிறார் ஏப்ரல் மாதம் அதிசாரமாக தனுசு ராசியில் அமர்கிறார். அதன் பின்னர் மீண்டும் விருச்சிகத்திற்கு செல்லும் குரு பகவான் அக்டோபர் மாதம் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசியில் அமர்கிறார். லாப வீட்டில் அமரும் குருவினால் மேலும் லாபங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே உங்கள் ராசிநாதன் சனி லாபங்களையும் நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறார். கூடவே குருவும் இணைகிறார்.

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. ராசி நாதன் குருவின் சஞ்சாரம் ஒன்பதால் வீட்டில் இருப்பதால் யோகங்கள் கூடி வரும். குருவின் அதிசார வக்ர சஞ்சாரத்தினால் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் கூட தேடி வரும். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். 2019 ஆம் ஆண்டு அதி அற்புதமான ஆண்டாகும். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.

You might also like