40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை, கலைமகள் வித்தியாலயம், தமிழ் வித்தியாலயம், வற்றாப்பளை மகாவித்தியாலயம், றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சேர்ந்த 40 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

புலம் பெயர் தமிழரும் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவனுமான வி.பிரசன்னாவின் நிதிப்பங்களிப்பில், இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

தண்ணீரூற்று கணுக்கேணி கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து மாணவர்களுக்கு பணம் வைப்பிலப்பட்ட புத்தகங்கள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா மற்றும் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like