59 பேருக்கு காசோலை!!

மன்னார் மாந்தை மேற்கு வெள்ளாங்குளம் மற்றும் தேவன் பிட்டி கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு மானி பொருத்தும் வேலைத் திட்டத்துக்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் , மன்னார் பிரதேச சபை முதல்வர் எம்.முஜாஹிர் , மீள் குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்டத் திட்ட இணைப்பாளர் முஜூபுர் ரஹ்மான் , மாந்தை மேற்கு பிரதேச சபை முதல்வர் சந்தியோகு ,இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் ஆகியோர் கலந்து கொண்டு காசோலையை பயனாளிகளுக்கு வழங்கினர்.

You might also like