side Add

அமைச்சரவையைச் சரிசெய்ய குரே. விக்கியிடம் வலியுறுத்து

வடக்கு மாகாண சபை­யில் அர­ச­மைப்­புக்கு முர­ணாக ஆறு அமைச்­சர்­கள் இருக்­கின் ற­னர். அந்த எண்­ணிக்­கை­யைச் சீர்­செய்­ய­வேண்­டிய பொறுப்பு நிய­மன அதி­கா­ரி­க­ளுக் கு­ரி­யது. வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், வடக்கு மாகாண ஆளு­ந­ரும் அடுத்த அமர்­வுக்கு முன்­ன­தாக அத­னைச் சரி­செய்­ய­வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் மற்­றொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ர­வைச் சிக்­கல்­கள் தொடர்­பில் தீர்வு காணும்­படி இரண்டு மாதங்­க­ளில் நிறை­வேற்­றப்­ப­டும் இரண்­டா­வது தீர்­மா­னம் இது.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் நேற்­றைய அமர்­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வி­னால் அவ­சர கோரிக்கை ஒன்று முன்­வைக்­கப்­பட்­டது. அதில் அவர் தெரி­வித்­த­தா­வது:

முத­ல­மைச்­ச­ரால் தான் பதவி நீக்­கப்­பட்­டது தொடர்­பாக, டெனீஸ்­வ­ர­னால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கின் அடிப்­ப­டை­யில், நீதி­மன்ற இடைக்­கா­லத் தடை உத்­த­ரவு கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி பிறப்­பிக்­கப்­பட்­டது. இடைக்­கா­லத் தடை உத்­த­ர­வின் அடிப்­ப­டை­யில் டெனீஸ்­வ­ரன் தொடர்ந்து அமைச்­ச­ராக இருக்­கின்­றார் என்று தெளி­வா­கக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் மாகாண சபைக்கு முத­ல­மைச்­சர் உள்­பட ஐந்து அமைச்­சர்­க­ளுக்கு மேல் இருக்­க­மு­டி­யாது. ஆனால் இன்று வடக்கு மாகாண சபை­யில் ஆறு அமைச்­சர்­கள் செயற்­ப­டு­கின்­றார்­கள். இந்த விட­யம் சீர் செய்­யப்­ப­டாத நிலை­யில் ஆளு­நர் அமைச்­ச­ர­வை­யைக் கூட்ட வேண்­டா­மென்று தலை­மைச் செய­ல­ருக்கு அறி­வு­றுத்­தல் வழங்­கி­யுள்­ளார்.

முத­லில் இந்த மாகாண சபை­யில் யார் அமைச்­சர்­கள் என்று எமக்கு முத­ல­மைச்­ச­ரால் ஒழுங்கு செய்­யப்­ப­டும் வரை சபை­யில் அமைச்­சர்­க­ளிற்­கு­ரிய ஆச­னங்­கள் ஒழுங்கு செய்­யப்­ப­டக் கூடா­தென அவைத் தலை­வ­ரைக் கேட்­டுக் கொள்­கின்­றேன்.

அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் சபை­யின் முக்­கிய செயற்­பா­டு­க­ளில் ஒன்று அமைச்­சர்­கள் மாகாண சபைக்­குக் கூட்­டா­கப் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளா­த­லும் வகை கூற­லும் ஆகும். இன்று அமைச்­சர்­களே யாரென்று தெரி­யாத சபை­யில் நாம் கூட்­டுப் பொறுப்­பி­னை­யும், கூட்டு வகை கூற­லை­யும் எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்? இதற்கு நிரந்­த­ர­மான தீர்­வொன்று உட­ன­டி­யா­கக் காணப்­ப­டல்­வேண்­டும். இன்­றேல் இந்­தச் சபை நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து முன்­னெ­டுத்­தல் அர்த்­த­மில்­லாத ஓர் செயற்­பாடு ஆகும் – என்­றார்.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் இந்த அவ­சர கோரிக்கை மீது விவா­தம் நடை­பெற்­றது. ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், வடக்கு மாகாண ஆளு­நர் பின் திக­தி­யி­டப்­பட்ட அர­சி­தழை வெளி­யி­டு­வ­தன் மூலம் இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­லாம் என்று குறிப்­பிட்­டார்.

வடக்கு மாகாண ஆளு­நர் அமைச்­சர்­கள் யார் என்­பது தொடர்­பில் அக்­க­றைப்­ப­ட­மாட்­டார், அவ­ருக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­க­வேண்­டி­ய­வர் முத­ல­மைச்­சரே, பின் திக­தி­யி­டப்­பட்ட அர­சி­தழை வெளி­யி­ட­வேண்­டு­மா­னால் அத­னை­யும் முத­ல­மைச்­சர்­தான் ஆளு­ந­ரி­டம் கோர­வேண்­டும், சட்­ட­வி­யாக்­கி­யா­னம் தொடர்­பில் முத­ல­மைச்­சர் உயர்­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருக்­க­லாம், ஆனால் அவர் அத­னைச் செய்­ய­வில்லை, வழக்­கின் கட்­ட­ளைக்கு எதி­ரா­கவே உயர்­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருக்­கின்­றார் என்று ஆளும் தரப்­பி­லி­ருந்தே அதற்­குப் பதி­ல­ளிக்­கப்­பட்­டது.

இந்த விவ­கா­ரத்­தில் வடக்கு மாகாண ஆளு­நர் மற்­றும் முத­ல­மைச்­சர் இரு தரப்­பி­லுமே தவறு இருக்­கின்­றது என்­ப­தைக் குறிப்­பிட்ட அவைத் தலை­வர், அவர்­கள் இரு­வ­ரும் இணைந்தே இந்­தப் பிரச்­சி­னையை சீர்­செய்ய முடி­யும் என்று குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து, அர­ச­மைப்­புக்கு முர­ணாக உள்ள அமைச்­சர்­க­ளின் எண்­ணிக்­கையை, நிய­மன அதி­கா­ரி­க­ளான முத­ல­மைச்­ச­ரும், ஆளு­ந­ரும் இணைந்து சீர்­செய்­ய­வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இதே­வேளை, வடக்கு அமைச்­ச­ரவை தொடர்­பில் நடை­பெற்ற சிறப்பு அமர்­வி­லும் இவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு முத­ல­மைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­போ­தும், முத­ல­மைச்­சர் அதனை ஏற்­றுக் கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like