அமைச்சர்களுடன் பிரதமர் அவசர சந்திப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க. அனைத்து அமைச்சர்களுடனும் முக்கிய சந்திப்பொன்றை இன்று நடத்தினார்.

அலரி மாளிகையில் இன்று காலை சந்திப்பு நடைபெற்றது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்குப் பதிலாக பதில் அமைச்சர்மார் மூவரை ஜனாதிபதி நியமித்தமை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான சர்வசன வாக்கெடுப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தேச திட்டம் உட்பட்ட பல விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like