அரபு நாட்டின் நிதியுதவில் வீட்டுத்திட்டம்- கொக்குப்படையான் மக்கள் எதிர்ப்பு

அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுத்திட்டத்தை உடன் நிறுத்தி காணியைப் பெற்றுத்தரக் கோரி தமது கொக்குப்படையான் கிராம மக்கள் இன்று முசலி பிரதேசச் செயலகத்தில்  மனுக் கையளித்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் காணி அலுவலகர்களை அழைத்துக் கொண்டு, வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்ட காணிப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

தன்னிடம் எவ்வித அனுமதியும் இன்றி குறித்த காணியில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர் உடனயடியாக குறித்த காணிகளில் வேலைத்திட்டங்களை நிறுத்த உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close