ஆச்சரியமூட்டும் ஹம்மிங் பறவை

உலகிலேயே மிகச் சிறிய பறவைதான் ஹம்மிங் பறவை.

இந்தப் பறவை கடல் கடந்து பறந்து செல்லும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

அமெரிக்காவில் காணப்படும் சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் தான் மிக அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன.

அமெரிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்தவுடன் இவை கூட்டமாக மெக்ஸிகோ, கியூபா உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்து போகும்.

800 முதல் 3 ஆயிரத்து 200 கிலோ மீற்றர் தூரம் வரை இவை பறந்து செல்கின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள்.

கடல் கடந்து பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இவை பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு மிக அதிகமாக உணவு உண்ணத் தொடங்கி விடுமாம்

இந்த உணவைக் கொழுப்பு வடிவில் தங்கள் உடலில் சேகரித்து வைப்பது தான் ஹம்மிங் பறவைகளின் சிறப்புத் தன்மையாக இருக்கிறது.

வெகு தொலைவு பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இந்தக் கொழுப்பைத்தான் இவை பயன்படுத்துகின்றன.

இப்படி வலசை போகின்ற பறவைகள் அமெரிக்காவில் பனிக்காலம் முடியும்போது சற்றும் வழி தவறாமல் அவ்வளவு தூரத்தையும் கடந்து தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பி விடுவதும் ஆச்சரியம்தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close