ஆண்டாங்குளம் பாடசாலையில் இரண்டு கட்டடங்கள் திறப்பு!!

மன்னார் ஆண்டாங்குளம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் “அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை“ எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டன.

ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையம் மற்றும் இடை நிலை விஞ்ஞன ஆய்வு கூடம் ஆகியவை இன்று திறக்கப்பட்டன.

அதிபர் பு.அந்தோனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண பொறியியலாளர், மடு உதவி கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like