ஆன்மீகச் சுடரேற்றும் – நல்லூர் முருகன்!!

அஞ்சு முகம் தோன்­றின் ஆறு­மு­கம் தோன்­றும் வெஞ்­ச­ம­ரில் அஞ்­ச­லென வேல் தோன்­றும்–­நெஞ்­சில்ஒரு கால் நினைக்­கின் இரு காலும் தோன்­றும்
முருகா என்றோது­வார் முன்’’

தமி­ழர் தம் வாழ்­வி­ய­லில் முருக வழி­பாடு தொன்று தொட்டு நிகழ்ந்து வரு­கின்­றது. முருகு என்­ப­தற்கு இளமை, இனிமை, அழகு எனப் பல்­வேறு பொருள்­கள் உள்ளன. இள­மை­யும் அழ­கும் வாய்ந்த பெரு­மா­னைக் குறிக்­கும் முருகு என்ற சொல்­லோ­டு­ வேள் என்ற இனிய சொல்­லை­யும் சேர்த்து முரு­க­வேள் என்­றும் வழங்­கப்­ப­டு­வ­துண்டு. விரும்­பத்­தக்க பொருளை வேள் என்­னும் சொல் உணர்த்­து­வ­தா­கும். காதல் தெய்­வ­மான காமனை, கரு­வேள் என்­றும், கருணை வடி­வாக விளங்­கும் முரு­க­னைச் செவ்­வேள் என்­றும் பழந் தமிழ் நூல்­கள் கூறு­கின்­றன.

கந்­தப் பெரு­மா­னைச் செந்­த­மி­ழால் அலங்­க­ரித்த கவி­ஞர்­கள் பலர். அலங்­கா­ரம் என்­றால் எல்­லோ­ருக்­கும் ஆனந்­தம். குழந்­தையை அலங்­க­ரித்து இன்­பு­று­வாள் தாய். கவி­தையை அலங்­க­ரித்து ஆனந்­தக் களிப்­பு­று­வான் கவி­ஞன். ஆண்­ட­வனை அலங்­க­ரித்து ஆனந்­தக் கூத்­தா­டு­வான் பக்­தன். சங்­கத் தமி­ழால் அப்­பெ­ரு­மானை அலங்­க­ரித்­தார் நக்­கீ­ரர். சந்­தத் தமி­ழால் அலங்­க­ரித்­தார் அரு­ண­கி­ரி­நா­தர். திருப்­பு­கழ் என்­னும் சந்­தத் தமிழ் மாலை அணிந்த பின்­ன­ரும், ஆராத அன்­பி­னால் அலங்­கா­ரம் ஒன்று செய்­தார் அரு­ண­கி­ரி­நா­தர். அதுவே கற்­ற­வர் போற்­றும் கந்­தர் அலங்­கா­ரம்.

‘‘செம்­மான் மக­ளைத் திரு­டும் திரு­டன்
பெம்­மான் முரு­கன் பிற­வான் இற­வான்’’
செம்­மை­யான மான் வயிற்­றுப் பிறந்த வள்­ளி­யைக்
களவு முறை­யில் கவர்ந்­த­வன் கந்­த­வேள்
என அலங்­கா­ரம் செய்­கி­றார் அரு­ண­கி­ரி­நா­தர்.

ஈழத்­தில் முருக வழி­பாடு
தென்­னிந்­தி­யா­வில் ஆறு­படை வீடு­க­ளில் எழுந்­த­ருளி அருள் பாலிக்­கும் முரு­கப் பெரு­மா­னுக்கு திரு­மூ­ல­ரால் சிவ­பூமி எனப் போற்­றப்­பட்ட இலங்­கைத் திரு­நாட்­டி­லு­ம் பல திருக்கோயில்­கள் உள்­ளன. கதிர்­கா­மக் கந்­தன் ஆல­யம், மண்­டூர் முரு­கன் ஆல­யம், வெரு­கல் சித்­திர வேலா­யு­தர் ஆல­யம், நல்­லூர்் கந்­த­சு­வாமி கோயில், தொண்­டை­மா­னாறு செல்­வச் சந்­நிதி முரு­கன் ஆல­யம், மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி கோயில் ஆகி­யவை பிர­சித்­தி­பெற்ற முரு­கன் ஆல­யங்­க­ளா­கும். இவற்­றை­விட முரு­க­னுக்­கு­ரிய ஆல­யங்­கள் பல எமது நாட்­டில் அமைந்­தி­ருப்­பது முரு­கப் பெரு­மா­னின் வழி­பாடு தொன்­மை­யான காலம் தொட்டு வழங்கி வரு­கி­றது என்­ப­தற்குச் சான்­றாக விளங்­கு­கின்­றது.

தமிழ் நாட்டு ஊர்­கள் நல்­லூர் என்­றும், புத்­தூர் என்­றும் வகுக்­கப்­பட்­டன. அந்த வகை­யில் திரு­வெண்­ணெய் நல்­லூர், சேய் நல்­லூர், வீர பாண்­டிய நல்­லூர், அந­பாய நல்­லூர் என பல ஊர்­கள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இவை சிறப்பு வாய்ந்த ஊர்­க­ளா­கக் கரு­தப்­பட்­டன. அர­சர்­க­ளும் தமது பெயர்­க­ளைக் கொண்­ட­மைந்த ஊர்­களை அமைத்­த­னர்.

ஈழத்­தி­லும் நல்­லூர் என்­னும் பெயர் கொண்ட ஐந்து கிரா­மங்­கள் உள்­ளன. வட இலங்­கை­யில் தமிழ் மன்­னர் மணி­முடி தரித்­துச் செங்­கோ­லாட்சி செய்த காலத்­தில் அவர்­க­ளது இரா­ச­தா­னி­யா­கிற நல்­லூ­ரிலே நடுநாய­க­மான விளங்­கி­யது நல்­லூர் கந்­த­சு­வாமி கோயில். சமூக உற­வாக்­கத்­தின் சின்­ன­மாக, பண்­பாட்­டின் நிலைக்­க­ள­னாக விளங்­கும் இந்த ஆல­யம் யாழ்ப்­பா­ணத்­தில் அமைந்­துள்ள ஆல­யங்­க­ளில் மிகப் பெரி­யது. ஆரம்ப காலத்­தில் இரா­ச­தா­னிக் கோயி­லாக இருந்­தது. இந்­தக் கோயில் யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளின் சமய வழி­பாட்டு முறை­க­ளை­யும் பேணிப் பாது­காக்­கும் நிலை­ய­மாக விளங்­கு­கின்­றது.

தமிழ் அர­ச­னின் வாசத்தலமாகிய நல்­லூ­ரிலே 870ஆம் வரு­டத்­தில் சிங்­கை­யா­ரிய மகா­ரா­ச­னின் மந்­தி­ரி­யா­கிய புவ­னே­க­பா­கு­ வி­னால் கட்­டப்­பட்டு போர்த்­துக்­கே­யர் ஆட்­சிக் காலத்­தில் இடிக்­கப்­பட்டு ஒல்­லாந்­தர் ஆட்­சிக் காலத்­தில் 1734ஆம் ஆண்­ட­ள­வில் இர­கு­நா­த­மாப்­பாண முத­லி­யார் அவர்­க­ளால் புனர்­நிர்­மா­ணம் செய்­யப்­பட்ட கோயி­லே­ இன்­றுள்ள நல்­லூர் கந்­த­ சு­வாம।ி கோயில்.

ஆல­யத்­தின்
தனிச் சிறப்­புக்­கள்
நேரந் தவ­றாமை நல்­லூர் கந்­த­சு­வாமி கோயி­லின் தனிச் சிறப்பு என­லாம். முரு­க­னது அருள் நாடி வரு­ப­வர்­க­ளுக்­கெல்­லாம் அர்ச்­ச­னைக்கு இன்­றும் ஒரு ரூபாவே அற­வி­டப்­ப­டு­கின்­றது. தின­மும் ஆறு­கா­லப் பூசை நடை­பெ­று­வ­தோடு விசேட தினங்­க­ளில் சிறப்­பான வழி­பா­டு­கள் நடை­பெ­று­கின்­றன. கந்­த­பு­ராண பட­ன வாசிப்பு சிறப்­பாக நடை­பெ­று­கின்­றது.

ஆடி அமா­வாசை முடிந்த பின்­னர் வரும் சஷ்­டி­யில் வரு­டாந்த மகோற்­ச­வம் ஆரம்­ப­மாகி, 28 நாள்­கள் தொடர்ந்து நடை­பெ­றும். அதா­வது ஆவணி அமா­சா­வை­யைத் தீர்த்­த­மா­கக் கொண்டு 25 நாள்­க­ளுக்கு மகோற்­ச­வம் நடை­பெ­றும். ஒவ்­வொரு நாளும் சுவாமி வெவ்­வேறு வாக­னங்­க­ளில் எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு காட்சி கொடுத்து அரு­ளாட்சி வழங்­கு­கின்­ற திரு­வி­ழாக் காலங்­க­ளில் கந்­த­னின் அலங்­கா­ரம் பிர­மிப்பை ஊட்­டு­ம். இதன் கார­ண­மா­கவே நல்­லூர்க் கந்­தனை அலங்­கா­ரக் கந்­தன் என அழைக்­கின்­ற­னர். வரு­டத்­தின் முழு நாள்க­ளும் அபி­சே­கம் நடை­பெ­று­வ­தால் நல்­லூர்க் கந்­தனை அபி­சே­கக் கந்­தன் என்­றும் அழைப்­பர்.

தூய்மை பேணு­தல், அமை­தி­பே­ணு­தல் ஆல­யத்­தின் தனிச்­சி­றப்பு என­லாம். மகோற்­சவ காலத்­தில் இலங்­கை­யில் பல பாகங்­க­ளி­லி­ருந்­தும் புலம்­பெ­யர் நாடு­க­ளி­லி­ருந்­தும் இலட்­சக் கணக்­கான அடி­ய­வர்­கள் ஆலய தரி­சனம் செய்­வ­தற்கு வரு­வார்­கள்.
மகோற்­சவ காலத்­தில் இடம்­பெ­றும் உருக்­க­மான தோத்­தி­ரப் பாடல்­கள், வாத்­தி­யக் கச்­சே­ரி­கள், பஜ­னைக் பாடல்­கள், மாண­வர்­கள் பங்­கு­கொள்­ளும் ஆன்­மீக சிந்­த­னையை வளர்க்­கும் நிகழ்­வு­கள் அனைத்­தும் ஆல­யச் சூழலை பக்தி மய­மாக்­கும் ஆற்­றல் நிறைந்­தவை.

நல்­லூர் கந்­த­சு­வாமி கோயில் மூலஸ்­தா­னத்­தி­லே வேல் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­ல­யத்­தில் தற்­போது ஐந்து அடுக்­குப் பிர­தான கோபு­ரம்,ஆறு­மு­க­சு­வா­மிக்கு சிறிய சிறிய கோபு­ரம் என 4 கோபு­ரங்­க­ளும் 6 மணிக் கோபு­ரங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. கிளிக் கோபு­ரம் தெற்­கி­லும், குபேர வாசல்­எ­னப்­ப­டும் கோபு­ரம் வடக்கு வாச­லி­லும் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்திய ஆல­யங்­க­ளுக்கு இணை­யாக குபேர கோபு­ரம் இவ்­வா­ல­யத்­திலே முதல் முத­லில் அமைக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வில் சிதம்­ப­ரத்­தில் பொற்­த­கடு வேயப்­பட்­டுள்­ளது போல, இவ்­வாண்டு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லும் சண்­மு­க­ருக்கு பொற்­த­கடு வேயப்­பட்டு பொற்­க­வ­சம் வைத்து கும்­பா­பி­சே­கம் செய்­யப்­பட்­ட­மை­யும் இவ்­வா­ல­யத்­துக்­கு­ரிய தனிச்­சி­றப்பு என­லாம்.

ஆடி அமா­வா­சைக்கு அடுத்­து­வ­ரும் ஆறாம் நாள்­கொ­டி­யேற்­ற­மும், 10ஆம் நாள் மாலை மஞ்­சத் திரு­வி­ழா­வும், 16ஆம் நாள் மாலை அரு­ண­கி­ரி­நா­தர் உற்­ச­வ­மும், 17ஆம் நாள் திருக்­கார்த்­திகை உற்­ச­வ­மும், 19ஆம் நாள் காலை சூரி­யோற்­ச­வ­மும் 20ஆம் நாள் காலை சந்­தான கோபால உற்­வ­ச­மும் மாலை கைலாச வாகன உற்­ச­வ­மும், 21ஆம் நான் காலை கஜ­ வல்லி மகா­வல்லி உற்­ச­வ­மும், மாலை வேல் விமா­னத்­தில் வேற்­பெ­ரு­மான் எழுந்­த­ரு­ளும் நிகழ்­வும், 22ஆம் நாள் மாம்­ப­ழத் திரு­வி­ழா­வும், 23ஆம் நாள் சப்­ப­ரத் திரு­வி­ழா­வும், 24ஆம் நாள் தேர்த்­தி­ரு­வி­ழா­வும், 25ஆம் நாள் தீர்த்­தத் திரு­வி­ழா­வும், 27ஆம் நாள் பைர­வர் உற்­ச­வ­மும் நடை­பெ­றும்.

இந்­தி­யா­வில் தஞ்­சைப் பெரு­வு­டை­யார் போன்ற பிர­மாண்­ட­ மான ஆல­யங்­கள் பல சைவத்­தின் மேன்­மை­யைப் பறை­சாற்றி நிற்­ப­து­போல யாழ்ப்­பா­ணத்­தின் மையத்­திலே பிர­மாண்­ட­மாக எழுந்­து­நின்று அருள் ஒளி பரப்­பும் நல்­லூர் கந்­த­சு­வாமி கோயி­லு­ம் சைவத்­தின் மேன்­மை­யை­யும், தமி­ழ­ரின் பண்­பாட்டு விழு­மி­யங்­க­ ளை­யும், உல­கெங்­கும் பறை­சாற்றி நிற்­கின்­றது என்­ப­தில் வட­பு­லத்­துச் சைவத் தமிழ் மக்­க­ளா­கிற நாம் அனை­வ­ரும் பெருமை கொள்­கின்­றோம்.

You might also like