ஆரவ்வின் புதிய படத்தில் ராதிகா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா.

சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறார்.

தற்போது பிக் பாஸ் புகழ் ஆரவ்வுடம் புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துக்கு மார்க்கெட் ராஜா என்று தலைப்பை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நார்காலியில் அமர்ந்திருக்கும் ராதிகா கையில் சுருட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like