side Add

ஆரவ்வைத் தொடரும் இயக்குநர்கள்!!

ராஜபீமா படத்தைத் தொடர்ந்து சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடிப்பதை ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், சரண் இயக்க, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுகூறும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like