இடரில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு – 10 லட்சம் ரூபா காப்புறுதி!!

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த வருடம் திடீர் இடரின் போது உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா காப்புறுதி பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்தினைக்களத்தில், பதிவு செய்யப்பட்ட தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் குடும்பத்துக்கே காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.

தோமஸ் மில்டன் என்பவருடைய குடும்பத்துக்கு இலவச காப்புறுதி திட்டத்தின் ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டது.

குறித்த 10 இலட்சம் ரூபாவில் 5 இலட்சம் குறித்த மீனவரின் மனைவிக்கும், மீதம் 5 இலட்சம் ரூபா இரு பிள்ளைகளுக்கும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் தலைமன்னார் பியர் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 83 பயனாளிகளுக்கு கடற் தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைக்காக மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன.

You might also like