இணையத்தில் வைரலான 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி நடித்திருந்த காட்சி படத்தில் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜானகி வீட்டிற்கு சென்ற த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி அவருக்கு முன்பாக த்ரிஷா ஒரு பாடல் பாடியுள்ளார். இதற்கு ஜானகியும் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

You might also like