இந்தியாவில் உயர் கல்வி- வழிகாட்டல் கண்காட்சி!!

இந்திய அரசின் பொதுநலவாய புலமை பரிசில் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உயர் கல்வியை பெறுவதற்கு வழிகாட்டும் கல்வி கண்காட்சி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் உயர் கல்வியை இந்தியாவில் தொடர்ப்புவதற்கு இந்திய அரசு வழங்கும் புலமை பரிசில் , எந்த பல்கலைக் கழகத்தில் என்ன கற்கை நெறி போன்ற விடயங்களும், .இளமானி ,முது மானி ,கலாநிதி படிப்புகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூரகத்தினால் முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்கப்படும்.

நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலன், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சி நாளையும் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like